தினகரனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் 28 எம்எல்ஏக்கள்

சென்னை: பிளவுபட்டுள்ள அதிமுகவை இணைப்பதில் புதிய சிக்கல் முளைத்திருக்கிறது. தினகரன் டெல்லி போலிசாரிடம் வசமாக சிக்கியுள்ள நிலையில் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் மூலமாக அதிமுகவில் புதிய குழப்பம் தலைதூக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வரும் இரு அணிகளுக்கு இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. இந்நிலையில், தினகரனுக்கு ஆதரவாகவும் சிலர் ஆங்காங்கே குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, சசிகலாவுடன் சிறை வாசம் அனுபவித்து வரும் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் தலைமையில் சிலர் தினகரனுக்கு ஆதரவாகச் செயல் பட்டு வருவதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.