மம்தா: டெல்லியையே கைப்பற்றுவோம்

கோல்கத்தா: மேற்கு வங்கத்தைக் கைப்பற்றும் பாஜகவின் இலக்கை உடைத்து டெல்லியைக் கைப்பற்று வோம் என்று பாஜகவின் மூத்த தலைவர் அமித் ஷாவின் சவா லுக்கு நேற்று எதிர் சவால் விட்டுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. 5 மாநிலங்களுக்கான தனது 15 நாள் பயணத்தை தொடங்கி உள்ள அமித் ஷா, மேற்கு வங்கத் தில் உள்ள பாஜகவினரை திரிணா மூல் கட்சியை வரும் 2019ஆம் ஆண்டுக்குள் வேரோடு பிடுங்கி எரியும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

பாஜக தனது கட்சிக்கு மிரட் டல் விடுக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் “திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சிறையில் போடுவோம்,” என்ற பாஜகவின் மிரட்டலுக்குத் தான் ஒருபோதும் பயப்படப் போவதில்லை என்றும் மம்தா தெரிவித்துள்ளார். “ஏன் திரிணாமூல் கட்சியைப் பார்த்து பயப்படுகிறீர்கள்? எங்கள் கட்சி வரப்போகும் நாட்களில் உங்கள் இடங்களையும் பிடித்து விடும் என்பதே உங்கள் பயத்திற்கு காரணம். என்னிடம் சவால் விடு பவர்களின் சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் டெல்லி யைக் கைப்பற்றப்போவது உறுதி,” என்று அமித்ஷாவிற்குப் பதிலடி கொடுத்துள்ளார் மம்தா.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. படம்: ஊடகம்