‘பாஜகவிடம் விலை போகாதீர்’ என கெஜ்ரிவால் எச்சரிக்கை

புதுடெல்லி: ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை வாங்க பாஜக அதிரடி முயற்சியில் இறங்கி உள்ளது. அவர்கள் 10 கோடி ரூபாய் கூட உங்கள் ஒவ்வொரு வருக்கும் வழங்க முன்வரலாம். ஆனால் இந்தப் பணத்திற்காக நீங்கள் அவர்களிடம் விலை போய்விடக் கூடாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எம்எல்ஏக் களுக்கு எச்சரிக்கை விடுத் துள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைமை மீது நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், கட்சியை விட்டு எம்எல்ஏக்கள் யாரும் போய்விட வேண்டாம் என கெஜ்ரி வால் வேண்டுகோள் விடுத்துள் ளார்.

அண்மையில் நடந்து முடிந்த டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி படு தோல்வியைச் சந்தித்தது. இதனால் கட்சி நிர்வாகிகள் சிலர் ஒவ்வொருவராக விலகத் தொடங்கி உள்ளனர். இன்னும் கூட சில எம்எல்ஏக்கள் இக் கட்சியில் இருந்து விலக உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கெஜ்ரிவால் எம்எல்ஏக்கள், நிர் வாகிகளை அழைத்து ஆலோ சனை நடத்திய பின் பேசினார். "ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை வாங்க பாஜக முயற்சி செய்து வருகிறது. அவர்கள் 10 கோடி ரூபாய் கூட வழங்க முன்வரலாம். அவர்களிடம் நீங்கள் விலை போகக்கூடாது. நீங்கள் எங்களை ஏமாற்றுவது என்பது கடவுளை ஏமாற்றுவதற்குச் சமம். கட்சியை விட்டு விலகமாட்டேன் என்று அனைவரும் உறுதிமொழி எடுத் துக்கொள்ள வேண்டும். இந்தப் புனிதமான கட்சியை விட்டுப் போய்விட்டால் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்கள்," என்று கெஜ்ரிவால் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!