கொடநாடு கொலையைத் தொடர்ந்து மர்ம மரணம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வின் கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்கள் விபத்தில் சிக் கியதால் மர்மம் அதிகரித்துள்ளது. கொலைச் சம்பவத்தை விசா ரித்து வரும் நீலகிரி போலிசார் நேற்று முன்தினம் நான்கு பேரை கேரள மாநிலம் திருச்சூரில் கைது செய்தனர். மேலும் மூன்று பேரை அவர்கள் தேடி வந்தனர். அவர்களில் முக்கியமானவ ராகக் கருதப்படும் சி. கனகராஜ், 36, சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த விபத்தில் மாண்டதாக போலிசார் தெரிவித்தனர். கொடநாடு எஸ்டேட்டில் பணி புரிந்து வந்த கனகராஜ் எஸ்டேட் டுக்கு ஜெயலலிதா வந்த போதெல்லாம் அ வ ர து கா ரோ ட் டி யாகப் பணி யாற்றினார். மு த ல் வ ரின் காரோட்டி எனச் சொல்லி காரியங்களைச் சாதித்து வந்ததால் கனகராஜை வேலையி லிருந்து ஜெயலலிதா நீக்கிவிட் டார்.