தமிழக அரசு துரோகம் செய்துவிட்டது: சீமான் தாக்கு

சென்னை: விவசாயிகளின் மரணத்தை முற்றாக மறைத்து, பொத்தாம் பொது வாக வறட்சியினால் எந்த விவசாயியும் உயிரிழக்க வில்லை எனத் தமிழக அரசு கூறியிருப்பது ஒட்டுமொத்த உழவர் பெருமக்களின் நெஞ்சிலும் ஆறா காயத்தை ஏற்படுத்தி இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தமிழகத்தில் ஆளுமை யற்ற ஆட்சிமுறையினாலும் அக்கறையற்ற நிர்வாகத் திறனாலும் விவசாயிகள் கடனாளிகளாக மாறியதாக அறிக்கை ஒன்றில் அவர் சாடியுள்ளார். விவசாயிகளைக் கடனா ளியாக்கி, சாகடித்ததைவிட அவர்களின் மரணத்தை மூடி மறைத்ததுதான் விவ சாயிகளுக்குத் தமிழக அரசு செய்திருக்கிற பச்சைத்துரோகம். இது விவசாயிகளின் மரணத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது.