இரு அமைச்சர்களிடம் விரைவில் விசாரணை

சென்னை: இரட்டை இலை சின் னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு தொடர்பில் தமிழக அமைச்சர்கள் இருவரை விசாரிக்க டெல்லி போலிசார் முடிவு செய்திருப்பதாகக் கூறப் படுகிறது. இந்த வழக்கில் டிடிவி தினக ரன் மூன்று நாள் விசாரணைக்குப் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை கைதானார். இதையடுத்து அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, உதவி யாளர் ஜனார்தனன் ஆகியோரும் போலிசாரின் விசாரணை வளை யத்துக்குள் கொண்டு வரப்பட் டனர்.

வழக்கில் தினகரனின் மனைவியும் கைதாக வாய்ப்புள்ளது என்றும் திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் விசாரிக்கப் படுவதாகவும் தகவல்கள் தெரி விக்கின்றன. இந்நிலையில் லஞ்சம் கொடுப் பதற்கான முயற்சியில் தினகர னுக்குத் தமிழக அமைச்சர்கள் இருவர் பல்வேறு வகையிலும் உதவி செய்ததாகத் தகவல் வெளி யாகி உள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் விசாரணை நடத்த டெல்லி போலிசார் முடிவு செய்துள்ளனர். மிக விரைவில் இந்த விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!