ஹைதராபாத்தில் ‘விசா கடவுள்’; அலைமோதும் கூட்டம்

ஹைதராபாத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கும் சில்கூர் பாலாஜி கோவிலுக்குச் செல்வோரின் ‘விசா’ வேண்டுதல்கள் நிறைவேறுவதாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரள்கின்றனர். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளால் அமெரிக்கா செல்ல விரும்பும் இந்திய இளையர்கள் பலரது விருப்பம் நிறை வேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் அமெரிக்க விசா கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதல்களே அந்தக் கோவிலில் வைக்கபப்டுவதாகக் கூறப்படுகிறது. அந்தக் கோவில் 500 ஆண்டுகள் பழமையானது.