500 ரூபாய் நோட்டுகளில் காணாமல் போன காந்தி

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியாவின் ஏடிஎம் இயந்திரத் திலிருந்து வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுத்தபோது சில 500 ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு மொரினாவில் உள்ள ‘எஸ்பிஐ’ ஏடிஎம்மில் இந்த நோட்டுகள் வெளி வந்தன. அவருக்கு வந்த நான்கு 500 ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கத் தில் தொடர் எண்ணைத் தவிர வேறு எதுவும் பதிவாகவில்லை. காந்தி படமும் இல்லை. மத்தியப்பிரதேசத்தில் மட்டும் ஜனவரி மாதத்திலிருந்து மூன்று முறை காந்தி படம் இல்லாமல் ரூபாய் நோட்டுகள் வந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து உடனடியாக அவர் வங்கி அவசர எண்ணுடன் தொடர்பு கொண்டு புகார் அளித் தார். இதற்கு ஆர்பிஐ விசாரணை நடத்தும் என்று வங்கி அதி காரிகள் பதில் அளித்தனர். இந்த நிலையில், “செய்யாத தவறுக்கு தற்போது ஆர்பிஐ வங்கிக்குச் செல்ல வேண்டியிருக் கிறது,” அந்த வாடிக்கையாளர் நொந்துகொண்டார்.

காந்தி படம் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள். படம்: இந்திய ஊடகம்