காஷ்மீர் விவகாரத்தை பேசி தீர்க்க வேண்டும்

புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ் தானும் காஷ்மீர் பிரச்சினை குறித்து முழு மூச்சாக விவாதித்து முடிவு கட்ட வேண்டும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் வலி யுறுத்தியிருக்கிறார். இரண்டு நாள் பயணம் மேற் கொண்டு இந்தியா வந்துள்ள அவரை மத்திய அமைச்சர் விஜய் கோயல் மற்றும் வெளியுறவு துறை உயரதிகாரிகள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின்னர் அதிபர் மாளிகையில் துருக்கிய அதிபருக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட் டது.

அதிபர் பிரணாப் முகர்ஜியும் பிரதமர் மோடியும் அவரை வர வேற்றனர். இந்திய ராணுவத்தின் மரி யாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, துருக்கி அதிபரை இரு கரங்களுடன் வரவேற்பதாகக் குறிப்பிட்டார். முன்னதாக இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு முன்பு அங்காரா வில் செய்தியாளர்களிடம் பேசிய திரு எர்டோகன், "பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் பிரச்சினை களுக்குத் தீர்வு காண வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார். 'என்எஸ்ஜி' எனும் அமைப்பில் இந்தியா இணைய துருக்கி எப் போதும் ஆதரவாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

திரு எர்டோகனை வரவேற்ற அதிபர் பிரணாப் முகர்ஜியும் பிரதமர் நரேந்திர மோடியும். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!