கொடநாடு கொள்ளை: முக்கிய குற்றவாளி கைது

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ் டேட் பங்களாவில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடர் பில் முக்கிய குற்றவாளி மனோஜ் கைதாகியுள்ளார். அண்மையில் கொடநாடு பங்களாவின் இரு காவலர்களில் ஒருவர் கொல்லப்பட்டார். மற் றொருவருக்குக் கத்திக்குத்து விழுந்தது. அவரிடம் நடத்தப் பட்ட விசாரணையில், ஜெயலலி தாவின் முன்னாள் கார் ஓட்டு நர் கனகராஜ் என்பவருக்குக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரியவந்தது. கனகராஜ் தன் நண்பர் சயன் என்பவருடன் சேர்ந்து கொடநாடு பங்களாவில் கொள் ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

அப்பங்களாவில் 200 கோடி ரூபாய் ரொக்கப் பணம் இருப்ப தாக கனகராஜ் கூறியதை நம் பிய சயன், திருச்சூரைச் சேர்ந்த தனது நண்பரும் ஹவாலா தரகருமான மனோஜ் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து எவ்வாறு கொள்ளையடிக்க வேண்டும் என்றும், கொள்ளையடித்த பணத்தை எவ்வாறு கொடநாட் டில் இருந்து பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் திட்டம் வகுத்துக் கொடுத்துள்ளார் மனோஜ். கொள்ளைச் சம்பவத்துக்குப் பின்னர் கனகராஜ் விபத்தில் இறந்து போக, சயனும் விபத் தில் சிக்கி படுகாயம் அடைந் துள்ளார். இந்நிலையில் கேரள மாநிலம், வயநாட்டில் பதுங்கி இருந்த மனோஜை போலிசார் நேற்று காலை கைது செய்துள் ளனர்.

கொடநாடு பங்களாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள். படம்: தகவல் ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!