தினகரன் கைது நடவடிக்கை பாஜகவின் அரசியல் சதித்திட்டங்களில் ஒன்று: திருமாவளவன்

தூத்துக்குடி: டிடிவி தினகரன் கைது நடவடிக்கையைப் பாரதிய ஜனதாவின் அரசியல் சதித்திட்டங்களில் ஒன்றாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், தற்போதைய தேர்தல் முறைதான் இந்தியாவின் ஊழல் முறைகேடுகளுக்கு ஊற்றுக்கண்ணாக உள்ளது என்று விமர்சித்தார். தமிழகத்தில் இன்றைய அரசி யல் சூழ்நிலையானது மக்கள் அச்சப்படக்கூடிய நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து மதவாதத்தை முறியடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

"மதவாத சக்திகளிடம் இருந் தும் சாதியவாத சக்திகளிடம் இருந்தும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக பாஜக தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி அதன் மூலம் இங்கு காலூன்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. "ஒரு கட்சி வளர்ச்சி அடைய வேண்டும் என்று விரும்புவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. பாஜகவுக்கும் அந்த உரிமை உண்டு. ஆனால் தமிழ் நாடு என்பது மதவாதத்துக்கும் சாதிய வாதத்துக்கும் இடம் கொடுக்காமல் அரசியல் தளத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக சமூக நீதியை முன்னிறுத்தி அரசியல் செய்யும் மாநிலம்," என்றார் திருமாவளவன். தமிழகத்தில் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் தற்போது நிலவுவதாகக் குறிப் பிட்ட அவர், அத்தகைய நிலை ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள் ளது என்றார்.

"இரட்டை இலை சின்னத்துக் காக லஞ்சம் கொடுக்க தினகரன் தயாராக இருந்தார் என்று கூறும் புலனாய்வுப் பிரிவினர், அதனை வாங்க யார் தயாராக இருந்தனர்? யாருக்கு தர திட்டமிட்டு இருந் தனர்? என்பதை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. அதனை விரைவில் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்," என்று திருமாவளவன் வலியுறுத்தினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!