சகாயம்: என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள்

சென்னை: நேர்மையாகச் செயல் படுவதால் தம்மை மனநிலை பாதிக்கப்பட்டவர் எனச் சிலர் விமர்சிப்பதாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், உலகத்தில் பல்வேறு வரலாற்று மாற்றங்கள் மனநிலை பாதிக்கப்பட் டவர்களால்தான் நடந்துள்ளது எனச் சுட்டிக்காட்டினார். அனைவரும் இணைந்து புதிய தமிழ்ச் சமூகத்தைப் படைக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தமிழ்ச் சமூகத்தில் மகத் தான மாற்றம் நிகழப்போகிறது என்ற நம்பிக்கை தமக்கு உள்ள தாகக் குறிப்பிட்டார்.

"அண்மையில் குடும்பத்துடன் காரில் மதுரை சென்றேன். அப் போது ஒரு கார் பின் தொடர்ந்தது. ஏற்கெனவே எனக்கு மிரட்டல்கள் உள்ளன. இப்போதெல்லாம் வாக னத்தில் செல்பவர்கள் எப்படி இறக்கிறார்கள் என்பது மர்மமாக உள்ளது. எனவேதான் கவனமாக இருக்க எண்ணினேன். அந்த காரில் வந்த நபர் எனது காருக்கு இணையாகவந்து இரு கை கூப்பி வணக்கம் தெரிவித்தார். எனது தமிழ்ச் சமூகம் நேர்மையை அடை யாளம் காணத் தொடங்கியிருப்ப தன் அடையாளமாக இதைப் பார்க்கிறேன்," என்றார் சகாயம்.

இளைஞர்களில் பெரும் பகுதி யினர் நேர்மையை அடையாளம் காணத் தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், மெரினாவில் இளையர்கள் மகத்தான புரட்சியை நிகழ்த்தியதாகத் தெரிவித்தார். "நட்சத்திரங்களை நம்பித்தான் எனது சமூகம் வீழ்ந்து கிடக்கிறது. இளையர்கள் நட்சத்திரங்களை ஒதுக்கிவிட்டு, மகத்தான புரட் சியை நிகழ்த்தினர். இது காளைக் கான புரட்சி அல்ல. நாளைக்கான புரட்சி என்று அப்போது நான் சொன்னேன்," என்றார் சகாயம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!