நாளை தொடங்குகிறது ‘அக்னி நட்சத்திரம்’

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் அக்னி நட்சத்திர காலம் தொடங்குகிறது. மே 28ஆம் தேதி வரை தமிழகத்தை வெயில் வாட்டி எடுக்கும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு பருவ மழை பொய்த்துப்போன நிலையில், தமிழ கத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் பல்வேறு நகரங்களில் கடந்த சில தினங் களாகவே வெயிலின் அளவு நூறு டிகிரியைக் கடந்து பதிவாகி வரு கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள், அணைகள், ஏரிகள், குளங்கள் என அனைத்தும் தண்ணீர் வற்றிக் காணப்படுகின்றன. குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அறவே நின்றுபோயிருப்பதால், கோடை சுற்றுலா வரும் பயணிகள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

குற்றாலத்தில் பிரதான அருவியில் தண்ணீர் வரத்து நின்றுள்ளது. படம்: தகவல் ஊடகம்