7 நீதிபதிகளுக்கு கைதாணை அனுப்பிய நீதிபதி கர்ணன்

புதுடெல்லி: சென்னை உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாகப் பணி யாற்றி வந்த நீதிபதி கர்ணன், கோல்கத்தா உயர் நீதிமன்றத் திற்கு மாற்றப்பட்டார். அவர் உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி க ளுக்கு எதிராக அதிபருக்கும் பிரதமருக் கும் கடிதங்கள் எழுதியது தொடர் பாக அவர் மீது உச்ச நீதி மன் றம் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக் காக நீதிபதி கர்ணனுக்குச் சம்மன் அனுப்பப்பட்டபோதிலும் அவர் முன்னிலையாகாததால் அவர் நீதித்துறை பணிகளைச் செய்யக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது.

பிறகு அவர் மார்ச் 31ஆம் தேதி முன் னிலையானார். அதைத்தொடர்ந்து, தனக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதி பதி உள்பட 7 நீதிபதிகளும் தன் முன்பு முன்னிலையாக வேண்டும் என்று அவர் உத்தரவு பிறப்பித் தார். இதனால், நேற்றுமுன்தினம் உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி கர்ணனின் நடவடிக்கை கள் குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். நீதிபதி கர்ணனின் மனநிலை யைப் பரிசோதிக்க அவருக்கு மே 4ஆம் தேதி மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட் டனர். அதுபோல், தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கும் மனநல பரிசோதனை நடத்துமாறு நீதிபதி கர்ணன் உத்தரவு பிறப் பித் தார். இந்நிலையில், அடுத்த திருப்ப மாக தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேகர் உள்பட 7 நீதிபதிகளுக்கு எதிராக பிணை யில் விட முடியாத கைதாணை பிறப்பித்து நீதிபதி கர்ணன் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார்.

கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன். படம்: ஊடகம்