ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறைக்கப்பட்டது

புதுடெல்லி: ஈரானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவை இந்தியா கடந்த ஆண்டில் வாங்கியதுடன் ஒப்பிடுகையில் நான்கில் ஒரு பங்கு குறைத்துக்கொண்டுள்ளது. ஈரானிடம் பெரிய அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் முக்கிய நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. கடந்த ஆண்டில் இந்தியா 510,000 பீப்பாய் கச்சா எண்ணெய்யை ஈரானில் இருந்து இறக்குமதி செய்துள்ள தாகக் கூறப்படுகிறது. அது இந்த ஆண்டில் 370 ஆயிரமாகக் குறைந்துள்ளது. ஐரோப்பாவின் பிரென்ட் மார்க் கச்சா எண்ணெய் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இது மத்திய கிழக்கின் கச்சா எண்ணெயுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவிலான கந்தகத்துடனும் குறைவான அடர்த்தியுடனும் விலை மலிவாகவும் உள்ளது. எனவே, இந்தியா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் ரஷ்யாவின் ரோஷ்நெப்ட் எண்ணெய் நிறுவனம் வெனிசுலா கச்சா எண்ணெய்யை இந்தியா வுக்குள் கொண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!