பாகிஸ்தானைப் பழி தீர்க்க வேண்டும் -பிரேம் சாகரின் மகள்

எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைமைக் காவலர் பிரேம் சாகர் த லை து ண் டி க் க ப் ப ட் ட த ற் கு ப் பழிவாங்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் 50 தலைகளை இந்திய வீரர்கள் கொய்துவர வேண்டும் என்று அவரது மகள் சரோஜ் ஆவேசமாகக் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராகப் போராடி வரும் ராணுவ வீரர்களின் நலனில் மத்திய அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதால், இத்த கைய கொடூரச் செயல்கள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருவதாக கொலை யுண்டவர்க ளின் உறவினர்களும் பாஜக அரசு மீது குற்றம் சாட்டியுள் ளனர். "பாகிஸ்தான் விவகாரத்தில் பாஜக அரசு உரிய முறையில் செயல் படவில்லை.

பாகிஸ்தானின் இந்தக் கொடூரமான செயலுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். நாட்டுக்காக எனது சகோதரர் உயிர்த் தியாகம் செய் ததை எண் ணிப் பெருமையடைகிறேன். "அதே சமயம் பாகிஸ்தான் ராணு வம் அவரது தலையைத் துண் டித்து வெறியாட்டத்தில் ஈடு பட்டதைத் தாங்கிக்கொள்ள முடிய வில்லை," என சகோதரர் தயா சங்கர் தெரிவித்துள்ளார்.

தலைமைக் காவலர் பிரேம் சாகரின் தலை துண்டிக்கப்பட்டதற்கு இந்திய ராணுவம் பாகிஸ்தானைப் பழி தீர்க்க வேண்டும் என்று தந்தையை இழந்த மகள் சரோஜ் கூறியிருக்கிறார். படம்: இந்திய ஊடகம்


அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!