அதிமுகவினரை ஒருங்கிணைக்க உருக்கமான அறிக்கை: சசி திட்டம்

பெங்களூரு: அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ள நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, அதிமுகவினரை ஒருங்கிணைக்கும் வகையில் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த அறிக்கை இன்று வெளியாகக்கூடும் என்றும் அதில் ஓபிஎஸ், முதல்வர் எடப்பாடி தலைமையிலான அணிகளின் பெயர்களைக் குறிப்பிடாமல், அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்கவேண்டும் எனும் கருத்தை அவர் உருக்கமான முறையில் வலியுறுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே பெங்களூரு சிறையில் இளவரசியுடன் சேர்ந்து ஒரே அறையில் இருந்து வந்த சசிகலா, தற்போது தனி அறைக்கு மாறியிருப்பதாகத் தெரிகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு தனி அறை கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அதில் மின் விசிறி, தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட வசதிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சசிகலா தினந்தோறும் ஜெயலலிதா நடித்துள்ள திரைப்படங்களைப் பார்த்து பொழுதுபோக்குவதாகத் தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!