சென்னை நிறுவனத்திடம் ரூ.1.67 கோடி மோசடி: சிங்கப்பூர் இளையர் மீது வழக்கு

சென்னை: மின்னஞ்சல்கள் மூலம் சிங்கப்பூர், சென்னையில் உள்ள நிறுவனங்களை ஏமாற் றிய சிங்கப்பூர் இளைஞர் மீது சிபிஐ மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. கிரேஸ் டான் என்ற அந்த ஆடவர், சென்னையைச் சேர்ந்த நகை நிறுவனத்திடம் 1.67 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள தாக சிபிஐ தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தங்கம் ஏற்றுமதி செய்து வருகிறது. சில ஆண்டு களுக்கு முன் சிங்கப்பூரிலுள்ள ஒரு நிறுவனத்துக்குச் சுமார் 6.7 கிலோ தங்கத்தை சென்னை நிறுவனம் ஏற்றுமதி செய்தது. இதையடுத்து சென்னை நிறுவனத்திடம் இருந்து சிங்கப் பூர் நிறுவனத்துக்கு சில மின் னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. ஏற்றுமதி செய்யப்பட்ட தங்கத் திற்குரிய தொகையைத் தங்க ளது கணக்கில் செலுத்தும்படி சென்னை நிறுவனம் அவற்றில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் இணைய குற்றச்செயல்களில் ஈடுபட்டு தகவல்களைத் திருடக்கூடிய கிரேஸ் டான், சென்னை நிறுவ னத்தின் மின்னஞ்சல்களை இடைமறித்து படித்துள்ளார். பிறகு சென்னை நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியைப் போல் போலி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி உள்ளார். இதையடுத்து தனது வங்கிக் கணக்கு விவரங்களை குறிப் பிட்டு சிங்கப்பூர் நிறுவனத்துக் குத் தகவல் அனுப்பிய டான், தனது கணக்கில் ரூபாய் 1.67 கோடியைச் செலுத்தும்படி குறிப் பிட்டுள்ளார். இந்த மின்னஞ் சலை நம்பி சிங்கப்பூர் நிறுவ னம் அத்தொகையை டானின் வங்கிக் கணக்கில் செலுத்தியது. பணம் கிடைத்ததும், சிங்கப் பூர் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியைப் போன்று மேலும் ஒரு கணக்கைத் தொடங்கி, சென்னை நிறுவனத்துக்கு சில மின்னஞ்சல்களை அனுப்பியுள் ளார் கிரேஸ் டான்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!