குளத்தில் இறங்கி போராட்டம் நடத்திய பொதுமக்கள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நெடுவாசலில் போராட்டக்காரர்கள் குளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக நேற்று முன்தினம் ஏராளமானோர் ஒன்று கூடி மனிதச் சங்கிலி அமைத்தனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கடந்த 22 நாட்களாக இப்பகுதியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த மார்ச் 27ஆம் தேதி இத்திட்டத்தை செயல் படுத்துவதற்கான புரிந்து ணர்வு ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது. படம்: தகவல் ஊடகம்