கையூட்டு பெற்ற மும்பை வருமான வரி ஆணையர் கைது; ரூ.1.5 கோடி பறிமுதல்

மும்பை: வருவமான வரி செலுத்- தும் பெரிய நிறுவனம் ஒன்றுக்கு ஆதர வாக செயல்படுவதற்கு ரூ.2 கோடி ரூபாய் கையூட்டு கேட்டு, முன் பணமாக சுமார் 19 லட்ச ரூபாய் கையூட்டு பெற்றதாக வருமான வரித் துறை ஆணையரை சிபிஐ போலிசார் கைது செய்தனர். மேலும் அவ ருக்கு உடந்தையாக இருந்த மேலும் 5 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் வருமான வரித் துறை ஆணையராக இருப்பவர் பி.பி.ராஜேந்திர பிரசாத். இவர், வருமான வரி செலுத்துவதில் பெரிய நிறுவனங்களுக்குச் சாதக- மாகச் செயல்பட்டு வந்ததாகவும் இதற்கு லட்சக்கணக்கில் கையூட்- டுப் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், ஆந்திர மாநி- லத்தின் விசாகப்பட்டினத்தில் வருமான வரித்துறை ஆணையர் ராஜேந்திர பிரசாத்தை புதன்கிழமை கைது செய்தனர். அவரிடம் நடத் தப் பட்ட விசார- ணையில் மும்பை யில் இயங்கி வரும் எஸ்ஸார் குழுமத் தின் நிறுவனங்களில் ஒன்றான பாலாஜி டிரஸ்ட் என்ற நிறுவனத்தின் வருமான வரித் தாக்கலின்போது ரூ.2 கோடி கொடுத்தால் அந் நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்படுவதாக உறுதியளித்தார். இதுபற்றிய தகவல் சிபிஐக்குக் கிடைத்தது.

சிபிஐ போலிசாரால் கைது செய்து அழைத்துச்செல்லப்படும் மும்பை வருவமானவரித் துறை ஆணையாளர் பி.பி.ராஜேந்திர பிரசாத், பாதி முகத்தை மூடியவாறு செல்கிறார். படம்: தி இந்து

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!