ஆம் ஆத்மி நிர்வாகி மீது குறைகூறிய எம்எல்ஏ நீக்கம்

புதுடெல்லி: டெல்லியில் அண்மை- யில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி படுதோல்வியைச் சந்தித்தது. பாரதிய ஜனதா பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியதை அடுத்து, ஆம் ஆத்மி கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில், ஓக்லா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அமானதுல்லா கான், கட்சியின் முக்கிய நிர்வாகி குமார் விஸ்வாஸ் பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய கட்சிகளின் பின்புலத்தில் ஒரு முகவரைப் போல் செயல்பட்டு வருவதாகக் குறை கூறியிருந்தார். அதன்பின் கட்சியின் அரசியல் விவகாரக்குழு பதவியில் இருந்து விலகுவதாகவும் அமானதுல்லா கான் அறிவித்தார். இந்த நிலையில், தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்திய அமானதுல்லா கான் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்சியிலிருந்து விலகப் போவதாக குமார் விஸ் வாஸ் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த குமார் விஸ்வாஸ் கட்சியில்°இருந்து தாம் விலகப்போவதில்லை என்று கூறினார். ராஜஸ்தானில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அம் மாநிலத்தின் கட்சிப் பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். படம்: இந்திய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!