தூய்மையற்ற பெருநகரம் சென்னை: மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை ஆய்வு

இந்தியாவின் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை நடத்திய 'தூய்மையான நகரங்கள்' பற்றிய ஆய்வில் 235வது இடத்தைப் பிடித்து, இந்தியாவின் அசுத்த மான பெருநகரம் என்ற வேண்டாப் பெருமையைப் பெற் றுள்ளது தமிழ்நாட்டின் தலைநகர மான சென்னை. இம்முறை மொத்தம் 434 நகரங்களில் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இதில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர், போபால் ஆகிய நகரங்கள் முதலிரு இடங்களைப் பிடித்தன. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் உயர்ந்தபட்சமாக திருச்சி 6வது இடத்தையும் கோயம்புத்தூர் 16வது இடத்தையும் பிடித்தன. சென்னை பெருநகர எல்லைக் குள் வராத தாம்பரம், பல்லாவரம், ஆவடி ஆகிய பகுதிகள்கூட சென்னையைவிட மேம்பட்ட தரநிலைகளைப் பிடித்துள்ளன. தாம்பரம் 62வது இடத்தையும் பல்லாவரம் 155வது இடத்தையும் ஆவடி 169வது இடத்தையும் பிடித்தன.

கும்பகோணம் (37), ஈரோடு (42), மதுரை (57), திருப்பூர் (68), ஓசூர் (82), வேளாங்கண்ணி (84) ஆகியவை முதல் நூறு இடங்களுக்குள் வந்த மற்ற தமிழக நகரங்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!