நிர்பயா வழக்கு: தூக்குத் தண்டனை உறுதியானது

டெல்லியில் 2012 டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி ஒருவர் கூட் டாகப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நால்வரின் தூக்குத் தண்டனையை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்து இருக்கிறது. "நிர்பயா வழக்கு அரிதினும் அரிதான ஒன்று. இந்த வழக்கில் நீதியை நிலைநாட்ட அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டாக வேண்டும்," என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். அக்ஷய், பவன், வினய் சர்மா, முகேஷ் ஆகிய அந்த நான்கு குற்றவாளிகளும் 2013ல் விசா ரணை நீதிமன்றம் தங்களுக்கு விதித்த மரண தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

"குற்றவாளிகளின் மிருகத்தன மான, காட்டுமிராண்டித்தனமான செயல்கள் மனிதகுலத்தின் மன சாட்சியை உலுக்குவதாக உள்ளது. கருணை காட்டப்பட அவர்கள் தகுதியற்றவர்கள்," என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக, நேற்றுக் காலை யில் நிர்பயாவின் தந்தையும் இதையே கூறியிருந்தார். "உச்ச நீதிமன்றத்தை விடுங் கள், கடவுள்கூட இத்தகையவர் களை மன்னிக்கமாட்டார். அவர் களுக்கு மரண தண்டனை விதிக் கப்பட வேண்டும்," என்றார் அவர். "குற்றவாளிகளுக்குக் கருணை காட்டக்கூடாது," என்றார் நிர்பயா வின் தாயார்.

மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கும் (இடமிருந்து) முகேஷ், அக்‌‌ஷய், பவன், வினய். படம்: இந்திய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!