தாக்குதல் எதிரொலி: 40 வங்கிக் கிளைகளில் பணப் பரிவர்த்தனை நிறுத்தம்

தெற்கு காஷ்மீரில் போராளிகள் வங்கிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதால் புல்வாமா, ஷோபியன் ஆகிய மாவட்டங்களில் உள்ள 40 வங்கிக் கிளைகள் பணப் பரிவர்த்தனையை நிறுத்தி உள்ளன. அந்தப் பகுதியில் உள்ள ஜம்மு-காஷ்மீர் வங்கி, எல்லா குவாய் டெஹாடி வங்கி ஆகிய வற்றின் மீது அண்மையில் போராளிகள் தாக்குதல் நடத் தினர். அது போன்று மேலும் பல தாக்குதல்கள் நடக்கக்கூடும் என பாதுகாப்பு அதிகாரிகள் எச் சரிக்கை விடுத்ததை அடுத்து அந்த வங்கிகளில் ரொக்க பணப் பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட் டுள்ளன. ஆனால், அந்தப் பகுதியில் ஏடிஎம் உட்பட மற்ற வங்கிச் சேவைகள் செயல்பாட்டில் இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வங்கி ஊழியர்கள், வங்கிச் சொத்துகளுக்கு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் படும் வரை தற்காலிகமாக இந்த பணப் பரிவர்த்தனை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!