வாயுக் கசிவு; 300க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை

புதுடெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் இயங்கிவரும் ராணி ஜான்சி சர்வோதயா கன்யா வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த 300க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதியுடன் கூடிய அந்தப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயில்கின்றனர். நேற்று காலை வேளையில் அந்தப் பள்ளியின் அருகே ஒரு ரசாயன டேங்கர் லாரியில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் கண் எரிச்சலுக்கும் தொடர் இருமலுக்கும் ஆளாகினர். சிறிது நேரத்தில் பலர் மயக்கமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலிசார் பாதிக்கப்பட்ட 300க்கும் அதிகமான மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோரை அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச் சைக்காகச் சேர்த்துள்ளனர்.

தொழிற்சாலைப் பயன்பாட்டுக்காக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனப் பொருட்கள் இருந்த டேங்கரில் வாயுக்கசிவு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!