கணவரைத் துரத்தித் துரத்தி துப்பாக்கியால் சுட்ட மனைவி

பெங்களூருவில் பாதுகாப்பு முகவை ஒன்றை நடத்திவரும் பெண் தொழில் முனைவர் ஒருவர் தனது கணவரைத் துப்பாக்கியால் சுட்டதுடன் தப்பி ஓடி பேருந்தில் ஏறிய அவரை துரத்திச் சென்று கொல்ல முயன்ற சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. கணவர் சாய்ராம், 53, தனது மனைவி ஹம்சா, 48, உடன் ஓசூரில் இருந்து பெங்களூரு வுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது இருவருக் கும் இடையே தகராறு ஏற்பட்டது. பயணத்துக்கு இடையில் இருவரும் உணவு விடுதி ஒன்றில் மது அருந்தியதாகக் கூறப் படுகிறது. தொடர்ந்து சாய்ராம் காரை ஓட்டினார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் வலுத்தது.

திடீரென ஹம்சா துப்பாக்கியை எடுத்து சாய்ராமை நோக்கி சுடத் தொடங்கினார். மூன்று துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்த நிலையில் தப்பி ஓடும் எண்ணத்தில் காரை நிறுத்திவிட்டு சாய்ராம் கீழிறங்கி ஓடினார். அந்த வழியாகச் சென்ற பேருந்து ஒன்றில் ஏறினார் சாய்ராம். அதன் பின்னர், பேருந்தை முந்திச் சென்று காரை பேருந்தின் குறுக்கே நிறுத்தினார் ஹம்சா. ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதும் ஆத்திரத்துடன் பேருந்தில் ஏறிய ஹம்சா, சாய்ராமை மீண்டும் தாக்கிக் கொலை செய்ய முயன்ற தாகச் சொல்லப்படுகிறது. மற்ற பயணிகளின் தலையீட் டால் தாக்குதலிலிருந்து காப்பாற் றப்பட்ட சாய்ராம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சாய்ராம், ஹம்சா இடையே நெடுங்காலமாகப் பிரச்சினைகள் நிலவுவதாகவும் இருவரும் தனித் தனியாக வசித்து வருவதாகவும் அவர்களது உறவினர்கள் தெரி வித்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!