எச்-1 பி விசா பிரச்சினை: உயிரை மாய்த்துக்கொண்ட பெண்

ஹைதராபாத்: எச்-1 பி விசா பிரச்சினையால் அமெரிக்கா விலிருந்து இந்தியா திரும்பிய பொறியாளரின் மனைவி தற்கொலை செய்துகொண்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த ராஷ்மி ஷர்மா தமது கணவர், இரண்டு குழந்தைகள் ஆகியோருடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். அவரது கணவர் அமெரிக்காவில் உள்ள வங்கியில் எட்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அமெரிக்காவில் விசா விதிமுறைகளில் கொண்டு வரப்பட்ட மாற்றத்தினால் ராஷ்மியின் கணவரது விசா நீட்டிப்பு மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் இந்தியா திரும்பும் கட்டாயம் ஏற்பட்டது. இந்தியாவில் ராஷ்மியின் கணவருக்கு வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. கடுமையான கடன் சுமை அவரது குடும்பத்தை நெருக்கியது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று ராஷ்மி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.