மாயத் தோற்றமுடைய ஆட்சி நடக்கிறது: பாமக விமர்சனம்

காரைக்குடி: தமிழகத்தில் தற் போது மாயத் தோற்றமுடைய ஆட்சி நடைபெறுவதாக பாமக தலைவர் ஜி.கே.மணி விமர்சித்துள் ளார். இதன் காரணமாக மாநிலத் தில் வளர்ச்சிப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை என்று காரைக் குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஆவணங்கள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறு வதாகக் குறிப்பிட்ட அவர், அமைதிப்பூங்கா என்ற நற்பெயரை தமிழகம் இழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

"வறட்சியால் பாதித்தவர்க ளுக்கு இன்னும் இழப்பீடு வழங்க வில்லை. மத்திய அரசு, தமிழ கத்தை தொடர்ந்து புறக்கணிக்கி றது. குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். 'தமிழகத்தில் விவசாயி கள் தற்கொலை செய்யவில்லை' எனக் கூறுவதன் மூலம் அரசு உண்மையை மூடி மறைக்கிறது," என்றார் ஜி.கே.மணி. டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடும் பெண்களை காவல்துறையினர் அடித்து துன்பு றுத்துவதைக் கண்டிப்பதாகக் குறிப்பிட்ட அவர், போலிசாரின் செயல்பாடு பெண்களைப் போராட் டம் நடத்தத் தூண்டுவதாக அமைந்துள்ளது எனச் சாடினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!