நாயைக் கொன்ற இளையர்கள் கைது

வேலூர்: தங்களைப் பார்த்து இடைவிடாமல் குரைத்த நாயைச் சுட்டுக் கொன்ற இரு இளையர்களை வேலூர் போலிசார் கைது செய்தனர். 21 வயதான அருண்பாண்டியன் நேற்று முன்தினம் தனது நண்பர் அஸ்வினுடன் வனப்பகுதியில் வேட்டையாடச் சென்றார். போகும் வழியில் ரெட்டிவலசை கிராமத்தைக் கடந்தபோது, அங்கிருந்த நாய் இருவரையும் பார்த்து குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் இருவரும் அந்த நாயைத் தங்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதைக் கண்ட கிராம மக்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து இளையர் களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!