ஹைதராபாத் கணினிப் பொறியாளர்கள்: வேலை கிடைப்பதில் சிரமம்

ஹைதராபாத்: ஹைதராபாத் நகரைச் சேர்ந்த கணினிப் பொறியாளர்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்பட் டிருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. புதுடெல்லி, மும்பை, புனே, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களைச் சேர்ந்த கணினிப் பொறியாளர்களுடன் ஒப்பிடு கையில் ஹைதராபாத் பொறி யாளர்களின் நிரலிடும் திறன் குறைந்திருப்பதாகவும் அதனால் இந்தச் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக வும் கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள 500 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 36,000 பொறியியல் மாணவர் களைக் கொண்டு மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் இந்த முடிவு பெறப்பட்டுள்ளது. 'ஆட்டோமாட்டா' எனப்படும் தேசிய நிரலிடும் திறன் அறிக்கையின்படி, பொறியியல் மாணவர்களுக்குக் கற்பிக்கப் படும் முறை, திறன் குறைந்த ஆசிரியர்கள் ஆகியனவே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!