மரணத்தைத் தொட்டுத் திரும்பிய பயணிகள்

ராமேசுவரம் நோக்கிச் சென்ற சுற்றுலா வேன் ஒன்று பாம்பன் பாலத்தில் மோதி அந்தரத்தில் தொங்கியது. அதிலிருந்த 14 பய ணிகளும் அதிர்ஷ்டவசமாகத் தப் பினர். விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த அவர்கள் சுற்றுப்பயணமாக நேற்றுக் காலை ராமேசுவரம் நோக்கி வேனில் புறப் பட்டனர். அழகேசுவரன், 32, என் பவர் வேனை ஓட்டிச் சென்றார். விடியற்காலை 5.30 மணியளவில் பாம்பன் பாலத்தில் வேன் சென்று கொண்டு இருந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு அழகேசுவரன் வழிவிட்டார். அப்போது வேன் நிலை தடு மாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மழை தூறிக்கொண்டு இருந்த தால் சாலை ஈரமாக இருந்தது. அதனால் வழுக்கிக்கொண்டு வலப்புறமாகப் பாய்ந்த வேன் பாலத்தின் தடுப்புச் சுவரை இடித் ததும் அப்படியே நின்றுவிட்டது. வேனின் முன்பக்க சக்கரங்கள் பாலத்தின் வெளியே தொங்கியபடி இருந்தன. இன்னும் ஓரடி முன்னே சென்றால் கடலுக்குள் விழுந்து விடும் நிலையில் வேன் நின்றிருந் தது. உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் அலறினர். உதவி கேட்டு கூக்குரல் எழுப்பினர்.

பாம்பன் பாலத்தில் தொங்கிய வேன். படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!