சென்னை- டெல்லி இடையே புதிய விமானச் சேவை

புதுடெல்லி: சென்னையிலிருந்து டெல்லிக்குச் செல்ல 340 பேர் பயணம் செய்யக்கூடிய விமான சேவையை ஏர் இந்தியா விமான நிறுவனம் நேற்று தொடங்கியது. முன்னதாக இந்த வழித் தடத்தில் 160 பேர் மட்டுமே செல் லும் வகையில் சிறிய விமானத்தை அது இயக்கி வந்தது. இந்நிலையில் கோடை விடு முறையையொட்டி ஏராளமானோர் சுற்றுப் பயணம் மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரிய அளவு விமான சேவையை அறிமுகப் படுத்த ஏர் இந்தியா முடிவு செய்தது. இதையொட்டி 340 பேர் பயணம் செய்யக்கூடிய விமான சேவையை ஏர் இந்தியா தொடங்கி யுள்ளது. இதன்மூலம் சென்னை யிலிருந்து டெல்லிக்கும் டெல்லியி லிருந்து சென்னைக்கும் அதிக அளவு பயணிகள் பயணம் செய் வதால் இரு நகரங்களிலும் சுற்று லாத்துறை வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!