புதுடெல்லி: குண்டர் கும்பலால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி 2002ல் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் 14 குடும்ப உறுப்பினர்களையும் இழந்த பில்கிஸ் பானோ நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரது 15 ஆண்டுகால போராட்டத்துக்கு கடந்த வாரம் நீதி கிடைத்தது. மும்பை உயர்நீதிமன்றம் பாலியல் பலாத்காரம், கொலை குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இதில் தடயங்களை அழித்த ஐந்து போலிஸ்காரர்களும் இரண்டு மருத்துவர்களும் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பில்கிஸ் பானோ, "மன அமைதி ஏற்பட்டுள்ளது, நீதி வெற்றி பெற்றுள்ளது," என்றார்.
கணவர் யாக்குப் ரசூல், இரண்டு வயது மகள் அக்ஷா ஆகியோருடன் பில்கிஸ் பானோ. படம்: ராய்ட்டர்ஸ்