லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் பொறுப்பில் இருந்து கிரிஜா நீக்கம்

சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆணையர் பொறுப்பில் இருந்து தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் நீக்கப்பட்டுள்ளார். ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியிடம் இருந்து தமிழக முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ள நிலையில், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனப் பரிந்துரைத்து மத்திய வருமான வரித்துறை கிரிஜா வைத்தியநாதனுக்கு கடிதம் அனுப்பியது. லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் ஆணையராகவும் பொறுப்பு வகித்த கிரிஜா வைத்தியநாதன் லஞ்ச விவகாரம் குறித்து விசாரணை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அப்பொறுப்பில் இருந்து அவர் விலக்கப்பட்டுள் ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை புதிய ஆணையராக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் இந் நடவடிக்கை அரசு, அரசியல் தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!