தமிழர் நலனுக்கு எதிரான மத்திய அரசு: காங்கிரஸ் கடும் தாக்கு

சென்னை: மத்திய பாரதிய ஜனதா அரசு தமிழக நலன் களுக்கு எதிராகச் செயல் படுவதாக தமிழக காங்கி ரஸ் தலைவர் திருநாவுக்கர சர் குற்றம்சாட்டி உள்ளார். மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து குரல் கொடுக்க வும், போராடவும் அதிமுக அரசுக்கு துணிவும் முதுகெலும்பும் இல்லை என அவர் விமர்சித்துள்ளார். "மருத்துவக் கல்லூரிக ளுக்கு தேசிய தகுதி மற் றும் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றுள் ளது. இத்தேர்வில் பங்கேற்ற மாணவ, மாணவியர் கடுமையான பரிசோத னைக்குப் பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

"மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிரவாதி களை பரிசோதனை செய் வதைப் போல தலை முதல் கால் வரை சோதனை நடத்தியுள்ளனர். இத்தகைய கெடுபிடியான சூழலில் எப்படி தேர்வை சிறப்பாக எழுத முடியும்?" என்று திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார். இத்தகைய செயல்களை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட் டுள்ள அவர், இத்தகைய கொடுமைகளை ஏவிவிட்ட தைப் பார்க்கும்போது நாட் டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா எனும் கேள்வி எழுவதாகக் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!