காணொளிக் கருத்தரங்கு வழியாக நடைபெற்ற திருமணம்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது ஆபித் சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு ஷாம்லி மாவட்டைத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் இம்மாதம் ஐந்தாம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க இயலாத காரணத்தால் மணமகனால் அந்தத் தேதியில் இந்தியாவுக்குத் திரும்ப முடியவில்லை. இரு வீட்டாரும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை குறித்த நேரத்தில் நடத்த நவீன தொழில்நுட்பம் கைகொடுத்துள்ளது. சவூதி அரேபியாவில் நண்பர்கள், முஸ்லிம் சமயப் பெரியவர்கள் புடைசூழ மணமகனும் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள மணமகள் வீட்டில் உறவினர் புடைசூழ மணமகளும் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்க திருமணம் இனிதே முடிந்தது. மணமகனின் தந்தையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தத் திருமணத்திற்கு வந்திருந்தோர் வியப்புடன் வாழ்த்திச் சென்றனர். படம்: இணையம்

உத்தரப் பிரதேசத்தில் மணமகள் வீட்டில் திருமணக் காட்சி. படம்: இணையம்