மிருதங்கம் வாசிப்பதில் தடம் பதிக்கும் உடற்குறையுள்ள இளைஞர்

விருதுநகர்: தாளம் தப்பாமல் மிருதங்கம் வாசிப்பதிலும் தடம் பதித்து வருகிறார் தொடர்புத் திறன் குறைபாட்டால் பாதிக் கப்பட்ட விருதுநகர் இளைஞர் கௌதமன். இவருக்கு 33 வயதானாலும் 5 வயதுக்கு உரிய மன வளர்ச் சியே உள்ளது. பற்கள் இல்லாததால் தெளிவா கப் பேச முடியாது. இருப்பினும் கர் நாடக சங்கீத கீர்த்தனைகளைப் பாடுவதிலும் மிருதங்கம் வாசிப் பதிலும் மற்றவர்கள் ஈடுகொடுக்க முடியாத அளவுக்குச் சாதித்து வருகிறார் கௌதமன். அவரது பெற்றோர் சுந்தரராஜன்- கீதா தம்பதியினர் தஞ் சை யில் இருந்தபோது கௌத மனுக்கு உள்ள இசை ஆர் வத்தை அறிந்து மிருதங்கவித்வான் டி.கே.ராமச்சந் திர னிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அவரிடம் 8 ஆண்டுகள் சிறப்பாகப் பயிற் சியை முடித்து அரங்கேற்றமும் நடத்தப்பட்டது. அப்போது அவ ரை ஏராள மானோர் பாராட்டினர்.

கோயில் விழாக்கள், அரசு விழாக்கள், தனியார் நிகழ்ச்சி களிலும் மேடையேறி கீர்த்தனை கள், பாடல்கள் பாடி வந்தார் கௌதமன். இப்போது எவ்வித வாய்ப்பு களும் அவருக்குக் கிடைக்க வில்லை என்கின்றனர் அவரது பெற் றோர். தங்கள் மக னுக்கு அரசிடம் இருந்து உரிய அங்கீகாரமோ, ஊக்கமோ இது வரை கிட்ட வில்லை. அரசு விழாக் கள், பள்ளி நிகழ்ச்சி களில் கௌத மனை மேடை யேற்ற வாய்ப்புக் கொடுத் தால் அவரது இசை ஆர் வம் மேலும் துளிர்க்கும் என் ற னர் கௌதமனின் பெற்றோர்.