சுவர் இடிந்து 26 பேர் பலி திருமண மண்டபத்தின் சுவர்

இடிந்து விழுந்து 26 பேர் மாண்ட சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்தது. பாரத்பூர் மாவட்டத்தில் உள்ள அன்னபூர்ணா திருமண மண்ட பத்தில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த அந்த சோக சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்தனர். “புழுதிப் புயல் காரணமாக மண்டபத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால், புழுதிப் புயலில் இருந்து தப்புவதற்காக சுவரை ஒட்டி நின்றிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண் டனர். சம்பவம் குறித்து உள்ளூர் வாசிகள் அளித்த தகவலை அடுத்து மீட்புப் படையினர் உட னடியாக அங்கு விரைந்து சென் றனர்,” என்று தலைமை போலிஸ் ஆய்வாளர் அலோக் வ‌ஷிஷ்த் சொன்னதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி கூறியது. “11 ஆண்கள், எட்டுப் பெண் கள், நான்கு குழந்தைகள் என சம்பவ இடத்திலேயே 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காயமடைந்தனர். கடுமையான புழுதிப் புயலால் மின்சாரமும் தடைபட்டுள்ளது,” என்றும் திரு அலோக் தெரிவித்தார்.

துக்க நிகழ்வாக மாறிய கொண்டாட்டம்... சொந்தங்கள் கூடி புதிய பந்தத்தை உருவாக்கும் மகிழ்ச்சி கரமான திருமண விழா, இருக்கும் உறவுகளையும் இழந்து தவிக்க நேரிடும்படியாக மாறிப்போனது. உயிரிழப்புகளை ஏற்படுத்திய விபத்துக்குப்பின் சம்பவ இடத்தை ஆராயும் போலிசார். படம்: ஏஎஃப்பி