இலங்கைத் தமிழர்களை வாரணாசிக்கு அழைக்கும் மோடி

இலங்கைத் தலைநகர் கொழும்பு விலிருந்து இந்தியாவின் வார ணாசிக்கு நேரடி விமானச் சேவையை வரும் ஆகஸ்ட் மாதம் ஏர் இந்தியா தொடங்க இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கொழும்பு நகரில் நேற்றுக் காலை அனைத்துலக விசாக தின கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்த மோடி, “வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந் துள்ளது. எனது இனிய தமிழ் சகோதரர்களும் சகோதரிகளும் அங்கு செல்வதற்கு இப்புதிய விமானச் சேவை துணைபுரியும்,” என்று தமது உரையில் குறிப்பிட் டார். ஏராளமான பௌத்த பிக்கு கள் பங்கேற்ற இவ்விழாவின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இசைந் தமைக்காக மோடிக்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்துக்கொண்டார். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் இந்நிகழ்வில் பங் கேற்றார்.

பின்னர், பிற்பகலில் இந்திய வம்சாவளி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக மருத்துவ மனை ஒன்றை மோடி திறந்து வைத்தார். இதனைக் கட்ட இந்திய அரசாங்கம் 150 கோடி ரூபாய் வழங்கி உதவியுள்ளது.

கொழும்பு நகரில் நடந்த அனைத்துலக விசாக தின விழாவில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் மோடியை பௌத்த பிக்குகள் தங்களது கைபேசியில் படமெடுத்து மகிழ்ந்தனர். படம்: ஏஎஃப்பி