கழிவறையைக் காணவில்லை என போலிசில் புகார்

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநி லத்தைச் சேர்ந்த தாயும் மகளும் தங்களது வீட்டிலிருந்த கழிவறை களைக் காணவில்லை என்று போலிசில் புகார் தெரிவித்துள்ள னர். பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிராமப் புற ஏழை மக்களின் வீடுகளில் கழிவறைகள் கட்டித் தரப்படுகின் றன. பிலாஸ்பூர் மாவட்டத்திலுள்ள அமர்பூர் கிராமத்தைச் சேர்ந்த பேலா பாய் படேல், 70, அவரது மகள் சாந்தா, 45, ஆகிய இருவரும் தங்களது வீடுகளில் கழிவறை கட்ட விண்ணப்பித்து இருந்தனர். நீண்ட நாட்களாகியும் அவற்றைக் கட்டுவதற்கான அறிகுறி எதுவும் தென்படாததால் கடந்த வாரம் பஞ்சாயத்து அதிகாரிகளைச் சந் தித்து முறையிட்டனர்.

ஆனால், அப்பெண்களின் வீட்டில் கழிவறை கட்டப்பட்டுவிட்ட தாக ஆவணங்களில் உள்ளதால் மீண்டும் அவற்றை கட்டமுடியாது என்று அதிகாரிகள் மறுத்தனர். அதனைத் தொடர்ந்து, தங்களது வீட்டில் கட்டப்பட்ட இரு கழிவறை களைக் காணவில்லை என்று பெந்த்ரா போலிஸ் நிலையத்தில் அவர்கள் புகார் செய்தனர். திருட்டுப் போன கழிவறை களைக் கண்டுபிடித்துத் தருமாறு புகார் மனுவில் அவர்கள் தெரி வித்தனர். அதனைப் பதிவு செய்த அதிகாரி இஷாக் கால்கோ, இது தொடர்பாக விசாரணை நடத்தப் பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!