கைவினைக் கலைஞர்களுக்கு சிறப்பு இணையத்தளம்

சென்னை: தமிழக கைவினைஞர்களைப் பற்றியும் அவர்களது திறமைகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் சேகரித்து அவர்களுக்கென தனி இணையத் தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கைவினைஞர்களுக்கான www.tnartisaan.com என்ற வலைத்தளத்தை பொதுமக்கள் பயனடையும் வகையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார். தமிழகத்தின் சுமார் இரண்டு லட்சம் கைவினைஞர் களை இத்தொகுப்பில் இணைக்க திட்டமிடப்பட்டு இதுவரையில் 10,000 கைவினைஞர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு 500 கைவினைஞர்களின் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.