பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: மாணவிகள் அதிகம் தேர்ச்சி

சென்னை: தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. ஆனால் முதலிடம் பிடித்த மாணவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஒவ்வோர் ஆண்டும் மாண வர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அளவில் முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டி லிருந்து 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டது.

இதற்குப் பதிலாக மாணவர் களின் மதிப்பெண்களை அடிப் படையாக வைத்து 'கிரேட்' முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 'சிபிஎஸ்இ' பாடத் திட்டத் தின் கீழ் பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இதே முறையே பின்பற்றப்படுகிறது. முன்னதாக செய்தியாளர் களிடம் பேசிய கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட் டையன், "பழைய தேர்வு முடிவு அறிவிப்பு முறை கைவிடப்படு கிறது," என்றார். இதற்கான காரணத்தையும் விளக்கிய அவர், "முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடம் என்று அறிவிக்கும்போது ஒரு மதிப்பெண்ணில் அந்த இடத்தைத் தவறவிட்ட மாணவர் களுக்கு மன அழுத்தம் ஏற் படுகிறது," என்று கூறினார்.

தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ்-2 (12வது வகுப்பு) தேர்வில் இவ்வாண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!