லஞ்சப் புகார் கேள்விக்குப் பதில் அளிக்காமல் நழுவிய அமைச்சர்

சென்னை: அரசுப் பெண் அதிகாரியிடம் லஞ்சம் கேட்டதாக எழுந்துள்ள புகார் குறித்த கேள்விக்குப் பதிலளிக்காமல் அமைச்சர் சரோஜா நழுவினார். நேற்று முன்தினம் மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் பங்கேற்ற அவர், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் லஞ்சப் புகார் குறித்து கேள்வி எழுப்ப, அதைக் கண்டுகொள்ளாத அமைச்சர், தாமே தொடர்ந்து பேசியதுடன், இறுதியில் கேள்விக்குப் பதில் ஏதும் அளிக்காமல் அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.