வீட்டு மனை பத்திரப் பதிவுக்கான தடை நீங்கியது: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளைப் பத்திரப்பதிவு செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டவிதிகளின்படி பத்திரவுப் பதிவு மேற்கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் 2016 அக்டோபர் 20க்கு முன் விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத மனைகளை மறுவிற்பனை செய்யலாம் எனவும் நீதிமன்றம் தடைவிதித்திருந்த காலத்தில் நடைபெற்ற பத்திரப்பதிவுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். தற்போது அனுமதிக்கப்படும் பத்திரப்பதிவுகள் உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்த பத்திரப்பதிவுப் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!