மகளை எரித்துக் கொன்றதாக தந்தை உள்ளிட்ட 4 பேர் கைது

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே வீராளம்பட்டியைச் சேர்ந்த பெரியகார்த்திகேயன் என்பவரது மகள் சுகன்யா, 21. ஈரோடு அருகே தனியார் மருத்துவமனை ஒன்றில் தாதியாக வேலை செய்தபோது பூபதி என்னும் இளையருடன் சுகன்யா காதல் வயப்பட்டார். வெவ்வேறு சமுதா யத்தைச் சேர்ந்த இருவரும் கடந்த ஜனவரி 19ஆம் தேதி பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இதனைப் பெரிய அவமான மாகக் கருதிய பெரியகார்த்திகே யனும் அவரது உடன்பிறப்புகளும் ஏப்ரல் 15ஆம் தேதி சுகன்யாவை தந்திரமாக வரவழைத்து எரித்துக் கொன்றதாக போலிசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சுகன்யாவின் தந்தை பெரியகார்த்திகேயன், அத்தை செல்வி, சித்தப்பாமார்கள் பாண்டிக் கண்ணன், சுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சாதி மாறி திருமணம் செய்ததால் இவர்கள் சுகன்யாவை ஆணவ கொலை செய்ததாகத் தெரிவித்த போலிசார் ஓடை ஒன்றின் அரு கில் சுகன்யாவின் எலும்புக்கூடு பாகங்களை ஆதாரத்திற்காக சேகரித்ததாகக் கூறினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!