தொடரும் மதுக்கடைக்கு எதிரான போராட்டங்கள்: 79 பெண்கள் கைது

சென்னை: தமிழகத்தில் மதுக் கடைகளுக்கு எதிராக பெண்கள் நடத்தி வரும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. நேற்று முன்தினம் பொள்ளாச்சி, தர்மபுரி பகுதிகளில் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட மதுக்கடைகளை அப்பகுதி பெண்கள் திரண்டு வந்து சூறையாடினர். இதையடுத்து 81 பேர் கைதா கினர். இவர்களில் 79 பேர் பெண் கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சியை அடுத்துள்ள செல்லப்பம்பாளையம் கிராமத்தி லும், தர்மபுரி பாலக்கோடு வட் டத்திலும் நெடுஞ்சாலையில் மதுக்கடைகள் இயங்கி வந்தன.

உச்ச நீதிமன்ற உத்தரவு காரண மாக இக்கடைகள் மூடுவிழா கண்ட நிலையில், ஊருக்குள் புதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. இதற்கு அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், அதை மீறி கடைகள் திறக்கப் பட்டன. இந்நிலையில் நேற்று முன் தினம் இரு கடைகளும் வழக்கம் போல் திறக்கப்பட்டதால், ஆவேசமடைந்த பெண்கள், திடீ ரென திரண்டு வந்து கடைகளை மூடக்கோரி முழக்கங்கள் எழுப்பி னர். இதையடுத்து கடையை உடைத்து உள்ளே நுழைந்த பெண்கள், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுப்புட்டிகளை உடைத்து வெளியே வீசி எறிந்தனர்.

மதுக்கடையை அடித்து நொறுக்கும் பெண்கள். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!