அரசுப் பணி: சாணம் அள்ள தயாராகும் பட்டதாரிகள்

திண்டுக்கல்: பட்டப்படிப்பு முடித்து வேலையின்றி வீட்டில் இருப்பதை விட, சாணம் அள்ளி சம்பாதிப்பதில் தவறில்லை எனும் மனநிலைக்கு தமிழக பட்டதாரிகள் வந்துள்ளனர். இதன் வெளிப்பாடாக, கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்தப் பணியில் சேருபவர்கள் மாட்டுக் கொட்டகைகளில் பணி யாற்ற வேண்டியிருக்கும். மேலும், சாணம் அள்ளுவது, மாடுகளுக்கு தீவனம் வைப்பது எனப் பல வேலைகளைக் கவனிக்க வேண்டி யிருக்கலாம். இந்நிலையில், ஊதியம் அதிகம் இல்லையென்றாலும், அரசுப் பணி என்பதால், பட்டதாரிகள் இப் பணிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இப்பணிக்காக விண்ணப்பித்த 2.16 லட்சம் பேரில், ஆயிரக்கணக்கானோர் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் ஆவர். இவர்களுக்கான நேர்கா ணல் தற்போது துவங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன் தினம் நடந்த நேர்காணலில் பங்கேற்றவர்களுக்கு, மாட்டை பிடித்துக் கட்டுவது, சாணம் அள் ளுவது, தீவனம் வைப்பது உள் ளிட்ட பணிகள் வழங்கப்பட்டு அவர்களின் திறன்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. பட்டதாரிகள் பலர் முகம் கோணாது இவற்றைச் செய்து காட்டியது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பொறியியல் மேற்படிப்பை முடித்தவர்களும் கூட இந்த நேர் காணலில் பங்கேற்றதாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!