இந்திய அதிபர் தேர்தல்: அதிமுகவுக்கு நெருக்கடி

சென்னை: விரைவில் நடைபெற உள்ள இந்திய அதிபர் தேர்த லுக்குப் பின்னர் தமிழக அரசியல் களத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப் படுகிறது. மேலும், அதிபர் தேர்தலை யொட்டி அதிமுகவின் இரு அணி களுக்கும் டெல்லியில் இருந்து கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எதிர்வரும் ஜூலை 19ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக சார்பில் யாரை வேட்பாளராகக் களமிறக்குவது? என அக்கட்சித் தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. மேலும், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களின் ஆதரவைத் திரட் டுவதிலும் அக்கட்சித் தலைமை மும்முரமாக உள்ளது.

இதேபோல், திமுகவும் அக் கட்சித் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை மையமாக வைத்து, காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அதிமுகவின் இரு அணிகளுக்கும் டெல்லித் தரப்புகளின் நெருக்கடி அதிகரித் துள்ளதாம். பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளுமே அதிமுக அணிகளைத் தொடர்பு கொண்டு தங்களுக்கு ஆதரவு தருமாறு நெருக்கடி தருவதாகக் கூறப்படுகிறது. "அதிபர் தேர்தலைப் பொறுத்த வரை அதிமுக அணிகளின் வசம் ஏறத்தாழ ஐந்து விழுக்காடு வாக்குகள் உள்ளன. பாஜக வசம் சுமார் 48 விழுக்காடு வாக்குகள் இருப்பதால், அதிமுகவின் இரு அணிகளும் ஆதரவு அளித்தாலே பெரும் பலம் வந்துவிடும். பாஜக வின் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகரிக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!