'பாஜகவின் பினாமி அரசாக செயல்படுகிறது தமிழக அரசு'

சென்னை: தமிழக அரசு தற்போது பாரதிய ஜனதாவின் பினாமி அரசாக செயல்படுகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை பிரித்து ஆட்சி செய்த பாரதிய ஜனதா தற்போது, அக்கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்ய பார்ப்பதாகக் குற்றம்சாட்டினார். “தமிழகத்தில், யாரிடம் ஆட்சி, அதிகாரம் உள்ளது என தெரியவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலங்களில் நடைபெறாத ஒரு சம்பவம், தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்துள்ளது. “அங்கு, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமை யில் ஆய்வுக் கூட்டம் நடந்தது வேடிக்கையாக உள்ளது. தமிழ கத்தை, அதிமுக ஆட்சி செய்கிறதா அல்லது பாஜக ஆட்சி செய்கிறதா எனத் தெரியவில்லை,” என்றார் திருநாவுக்கரசர்.