கப்பல் மூலமாக 44 கிலோ தங்கம் பிடிபட்டது

புதுடெல்லி: தங்கக் கடத்தலைத் தடுக்க, விமான நிலையங்களில் கடும் சோதனைகள் மேற்கொள்ளப் பட்டு வரும் நிலையில், கப்பல் மூலமாக 44 கிலோ தங்கம் கடத்தும் முயற்சி முறியடிக்கப் பட்டுள்ளது. துபாயில் இருந்து குஜராத் மாநிலம் முந்திரா துறைமுகம் வழியாக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கன்டெய்னர் ஒன் றில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லி சந்திரவிகார் பகுதியில் வந்த சந்தேகத்துக்கு இடமான ஒரு கன்டெய்னர் லாரியை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் வழிமறித்துச் சோதனை நடத்தி னர். அப்போது, கோழிமுட்டைகளை அடைக்காக்க பயன்படும் 'இன்கு பேட்டர்' எனப்படும் சாதனத் திற்குள் 44 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 12 கோடியே 50 லட்ச ரூபாய் ஆகும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!